களக்காடு:
களக்காடு புலிகள் காப்பக அதிகாரியை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் களக்காட்டில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதனிடையே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியை ஆதரித்து மற்றொரு தரப்பினர் பொது மக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். வனத்துறை அதிகாரிக்கு எதிராகவும், ஆதரித்தும் இரு தரப்பினர் போஸ்டர்கள் ஒட்டி வருவதால் களக்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.