"இப்படியும் மோசடி நடக்கிறது..." - எச்சரிக்கை வீடியோ வெளியிட்ட டிஜிபி சைலேந்திரபாபு.!

பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.;

Update:2023-02-04 09:32 IST

சென்னை,

இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.

5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என அக்கும்பல் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபடுவதாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக சேலம் கன்னியாகுமரி மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கேரளாவிலிருந்தும் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்