கரும்பு ஏற்றி சென்ற வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி

கரும்பு ஏற்றி சென்ற வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது.

Update: 2023-04-13 18:18 GMT

அரியலூர் மாவட்டத்தில் கரும்புகள் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. வெட்டப்படும் கரும்புகள் சர்க்கரை ஆலைகளுக்கு லாரி மற்றும் டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வாகனங்களின் பின்புறத்தில் எந்த விதமான எச்சரிக்கை விளக்குகளும், ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லாமல் சென்று வருகின்றன. இதனால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கும் பொருட்டு அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், ஆய்வாளர் சரவணபவன் மற்றும் ஊழியர்கள் கீழப்பழுவூரில் வாகன சோதனைகள் செய்தனர். அப்போது அந்த வழியாக கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது அனைத்து வாகனங்களிலும் பின்புறம் எச்சரிக்கை விளக்குகள் எதுவும் எரியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வாகன ஓட்டுனர்களையும் அழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனைத்து வாகனங்களின் பின்புறத்திலும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்