மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.

Update: 2022-09-22 19:07 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மியான்மர் நாட்டில் 60 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதன்பின்பு ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

சட்டவிரோத வேலைகளை அவர்கள் செய்ய மறுத்தால் வேலை அளிப்போரால் மின்சாரம் பாய்ச்சி கடுமையாக தண்டிக்கப்படுவதாகவும், பிணைக்கைதிகளாக அவர்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும் தகவல்கள் வருகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு மியான்மரில் உள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களை மீட்டு பத்திரமாக இந்தியா கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்