தனியார் சிமெண்டு ஆலை ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை

வி.கைகாட்டி அருகே தனியார் சிமெண்டு ஆலை ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Update: 2023-04-19 18:40 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ரெட்டிபாளையம் கிராமத்தில் விநாயகர் கோவில், செல்லியம்மன் கோவில், சொர்ணபுரீஸ்வரர் ஆகிய கோவிலுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்டு ஆலை குடியிருப்பு பகுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதையடுத்து அரியலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் கலைவாணன் மற்றும் கோவில் செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு பகுதி என உறுதி செய்தனர். இந்த நிலங்களை அளவீடு செய்த பின் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் படி ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்