குளங்கள் மேம்பாட்டு பணிகளுடன் படித்துறை அமைத்து தர வேண்டும்

மயிலாடுதுறை நகரில் நடைபெற்று வரும் குளங்கள் மேம்பாட்டு பணிகளில் படித்துறையும் அமைத்து தர வேண்டும் என்று சமூக் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-19 18:45 GMT

மயிலாடுதுறை நகரில் நடைபெற்று வரும் குளங்கள் மேம்பாட்டு பணிகளில் படித்துறையும் அமைத்து தர வேண்டும் என்று சமூக் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளங்கள் சீரமைப்பு

மயிலாடுதுறை நகரில் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள குளம், சிறைச்சாலைக்கு பின்புற குளம், பெசன்ட் நகர் குளம், மாமரத்து மேடை குளம் என்று அனைத்து குளங்களிலும் அதன் எல்லை வரையறுக்கப்பட்டு 4 புறமும் மக்கள் நடந்து செல்வதற்கான நடைபாதைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் குளத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் தடுப்பு கட்டப்பட்டு அதன் மேல் சில குளங்களில் சிமெண்டு கற்கள் பதிக்கப்படுவதும், சில குளங்களில் தரைத்தளத்தை மேல் தளைத்துடன் இணைக்கின்ற வகையில் சம அளவு இடைவேளையில் சிமெண்டு சாய்வு தூண்கள் உள்ளிட்டவைகள் அமைக்க திட்டமி டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குளத்தை அழகு படுத்துதல், மேம்படுத்துதல், மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. இந்த பணிகளுடன் படித்துறையும் சேர்த்து அமைக்கப்பட்டால் அது பொதுமக்களுக்கு படயனுள்ளதாக மற்றும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

படித்துறை அமைக்க வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கூறுகையில், குளங்கள் சீரமைப்பு பணி மக்களுக்கு பெரிதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளங்களில் படித்துறை அமைத்தால் பொதுமக்களுக்க்கும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். படித்துறை அமைக்கப்படாமல் இருந்தால் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக மழைக் காலங்களில் குளங்களில் தண்ணீர் தேங்கி இருக்கின்ற பொழுது கால்நடைகளோ, மனிதர்களோ தவறி விழுகின்றபோது அவர்களை உடனடியாக காப்பாற்றுவதில் பெறும் சிரமங்கள் ஏற்படும். பொதுமக்களும், கால்நடைகளும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மனதில் கொண்டே நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட நீர்நிலைகளை உருவாக்கினார்கள்.

எனவே அருகிலுள்ள நகராட்சிகளில் இதே போன்ற திட்டத்தில் படிகளுடன் கூடிய குளங்கள் கட்டமைப்பு செய்யப்படுவதை உதாரணமாக கொண்டு,மயிலாடுதுறை நகராட்சியிலும் குள மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் மயிலாடுதுறை உள்ள 88 குளங்களும் ஒன்றோடு ஒன்று நீர் வழிப்பாதையில் தொடர்புடையது என்பதையும் உணர்ந்து அத்தகைய கட்டமைப்பையும் மீண்டும் புணரமைத்து குளங்களை மேம்படுத்தும் உன்னத திட்டத்தை நிறைவாக செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்