தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இலங்கை வசம் உள்ள மீனவர்களையும் மற்றும் மீனவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும்.

Update: 2024-08-09 11:45 GMT

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்கள் 4 நாட்டு படகுகளில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து, அவர்களின் நாட்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவக் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் சரிவர நடைபெறாமல், வருமானம் ஈட்ட முடியாமல் மிகுந்த சிரமத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலை தொடரக்கூடாது.எனவே மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கும், படகுகளை பறிமுதல் செய்வதற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு உடனடிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசு தற்போது கைது செய்யப்பட்டுள்ள 33 தமிழக மீனவர்களையும், ஏற்கனவே இலங்கை வசம் உள்ள மீனவர்களையும் மற்றும் மீனவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்