அடுத்தடுத்து 5 கடைகளில் பணம் திருட்டு

அடுத்தடுத்து 5 கடைகளில் பணம் திருட்டுபோனது.

Update: 2022-09-11 21:02 GMT

கடைகளில் திருட்டு

மண்ணச்சநல்லூர் ஆனந்த் நகரை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 52). இவர் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோடு அருகே பால் ஏஜென்சி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த ரூ.2,900-ஐ திருடி சென்றனர்.

இதேபோல் மண்ணச்சநல்லூர் வடக்கு ஏரி மிஷின் தெருவை சேர்ந்த மீராமொய்தின்(60) என்பவர், தாலுகா அலுவலகம் எதிர்புறம் செருப்பு கடை வைத்துள்ளார். இ்ந்த கடையில் ரூ.2 ஆயிரத்தையும், மேல காவல்கார தெருவை சேர்ந்த இளங்கோவனின் மகன் சீனிவாசனின்(27) கடையில் ரூ.1,700-ஐயும், அனுமார் கோவில் தெருவை சேர்ந்த சாமுவேல்ராஜ்(50) என்பவரின் பழக்கடையில் ரூ.2,500-ஐயும், சாலப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் கோகுல்ராஜின்(27) காபி கடையில் ஆயிரம் ரூபாயையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

போலீசார் விசாரணை

மேலும், அப்பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வரும் பொன்னர் என்பவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் எதுவும் இல்லாததால் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த கடைகளின் உரிமையாளர்கள், மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்