மாடுகளை திருடி ஆந்திர மாநிலத்தில் விற்பனை
லத்தேரி அருகே மாடுகளை திருடி ஆந்திராவில் விற்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த பனமடங்கியில், கடந்த 19-ந் தேதி மாட்டு கொட்டகையில் அடைத்து வைத்த மாடுகளை மறுநாள் பார்த்த போது காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பனமடங்கியைச் சேர்ந்த ரவி (வயது 59), முனிகிருஷ்ணன் (62) ஆகியோர் பனமடங்கி போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் பனமடங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம கும்பல் மாடுகளை திருடி சென்று ஆந்திர மாநிலத்தில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்தநிலையில் பலமநேரில் நடைபெற்ற சந்தையில், பனமடங்கியில் திருட்டு போன 2 மாடுகளை அடையாளம் கண்டுபிடித்து, அவற்றின் கன்றுகளோடு போலீசார் மீட்டனர்.
இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.