3 ஆடுகள் திருட்டு

பெண்ணாடம் அருகே 3 ஆடுகள் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-04-27 18:45 GMT

பெண்ணாடம்

பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 54), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 7 ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு உள்ள கொட்டகையில் கட்டி இருந்தார். பின்னர், நேற்று காலை எழுந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த 7 ஆடுகளில் 3 ஆடுகளை காணவில்லை. அதனை நள்ளிரவில் மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, ஆடுகளை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்