வீடு வாடகைக்கு கேட்பது போல் மூதாட்டியை ஏமாற்றி 12 பவுன் சங்கிலி திருட்டு

கரூரில் வீடு வாடகைக்கு கேட்பது போல் மூதாட்டியை ஏமாற்றி 12 பவுன் சங்கிலியை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-24 18:47 GMT

12 பவுன் சங்கிலி திருட்டு

கரூர் வேலுச்சாமி புரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கலாவதி (வயது 62). இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வந்து கலாவதியிடம் வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து கலாவதி அந்த நபருக்கு வீட்டை சுற்றி காண்பித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த நபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து கலாவதி தான் வீட்டில் வைத்திருந்த 12 பவுன் தங்கசங்கிலியை பார்த்துள்ளார். அப்போதுதான், வீடு பார்க்க வந்த மர்மநபர் அந்த சங்கிலியை திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து கலாவதி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து, தங்கசங்கிலியை திருடி சென்ற மர்மநபரை அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து வலைவீசி தேடி வருகிறார். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஏமாற்றி தங்கசங்கிலி திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்