வெள்ளை பூண்டு மூடை திருட்டு

மதுரையில் வெள்ளை பூண்டு மூடை திருட்டு நடந்தது.

Update: 2023-09-16 20:38 GMT

மதுரை,

மதுரை மீனாட்சிபுரம் கல்யாணசுந்தரம் 4-வது தெருவை சேர்ந்தவர் சின்னனன் (வயது 40). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் கீழமாசி வீதியில் உள்ள கடைகளுக்கு லாரியில் வரும் வெள்ளைபூண்டு மூடைகளை அந்தந்த கடைகளுக்கு முன்பு இறக்கி வைப்பார். சம்பவத்தன்று இரவு வெங்கலக்கடை தெருவில் உள்ள ஒரு கடைக்கு லாரியில் வந்த 15 வெள்ளைபூண்டு மூடைகளை இறக்கி வைத்துள்ளார். மறுநாள் காலையில் கடைக்காரர்கள் பார்த்த போது அதிலிருந்து 35 கிலோ எடை கொண்ட வெள்ளைபூண்டு மூடையை காணவில்லை. அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது நள்ளிரவில் ஒருவர் அந்த வெள்ளைபூண்டு மூடையை திருடி செல்வது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்