இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை
இயக்குநர் பாரதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை,
இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.