20 ஆண்டுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் தீர்மானம்
20 ஆண்டுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பிச்சை கனி, பொதுச்செயலாளர் தமிம்அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மண்டல தலைவர் இமாம் ஹஸ்ஸான் பைஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், திருச்சி மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளையும், 6 தமிழர்களையும் தமிழக அரசு 161-வது சட்டப்பிரிவின்படி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.