முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முகமது நபி குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் கிண்டால் ஆகியோரின் கருத்துகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் செய்து இப்ராஹிம், மாவட்ட பொதுச்செயலாளர் கன்சுல் மஹரிபா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மாவட்டச் செயலாளர் சுல்தான் அலாவுதீன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் முதுகுளத்தூரை சுற்றியுள்ள கிராமப் பகுதியிலிருந்து திரளான பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் முதுகுளத்தூர் நகர் தலைவர் அப்துல் அஸிஸ் நன்றி கூறினார்.