எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துகளை கூறிய பா.ஜ.க. நிர்வாகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கம்பம் நகர தலைவர் சிராஜூதீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி, மாவட்ட பொருளாளர் ஹக்கீம் ராஜா, உத்தமபாளையம் நகரத் தலைவர் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பம் தொகுதி தலைவர் சகுபர் சாதிக் கண்டன உரையாற்றினார். கம்பம் நகர செயலாளர் தாவுத் நிஷார் கோஷங்கள் எழுப்பினார். இதில் முஸ்லிம் ஜமாத்தார்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.