10 மையங்களில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வு

நெல்லையில் 10 மையங்களில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வை 1,482 பேர் எழுதினார்கள்.

Update: 2023-01-29 19:45 GMT

நெல்லையில் 10 மையங்களில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வை 1,482 பேர் எழுதினார்கள்.

எழுத்து தேர்வு

தமிழக ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர் 5 பேர், புள்ளியியல் கோர்ப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலியிடங்களுக்கு நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு நேற்று காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் நடந்தது.

இந்த தேர்வையொட்டி நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு 2,773 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 1,482 பேர் மட்டுமே எழுதினர். இது 53.44 சதவீதம் ஆகும். 1,296 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர்.

தாமதமாக வந்த பெண்

ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வராதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர், டவுனில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தார். ஆனால் அவர் 5 நிமிடம் தாமதமாக வந்ததாக அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

இதுதொடர்பாக அவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார். ஆனாலும் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்