மாநிலசாரண, சாரணிய இயக்க போட்டி: தூத்துக்குடி மாவட்ட அணிக்கு கேடயம் பரிசு

மாநிலசாரண, சாரணிய இயக்க போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணிக்கு கேடயம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-08 18:45 GMT

தமிழ்நாடு பாரத சாரண, சாரணிய இயக்கம் கிழக்கு மண்டலம் சார்பில் மாநில பெருந்திரளணி திருச்சியில் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 24 சாரணர்கள், 24 சாரணியர்கள் என 11 சாரண, சாரணிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அங்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கிராமிய நடனத்தில் முதலிடத்தையும், கலாச்சார அணிவகுப்பில் முதலிடத்தையும், சாரண, சாரணிய இயக்க அணிவகுப்பில் 2-வது இடத்தையும், கண்காட்சியில் முதலிடத்தையும், உணவுப்பொருள் கண்காட்சியில் முதலிடத்தையும், உடல்திறன் போட்டிகளில் முதலிடத்தையும், கைவினைப் பொருட்கள் செய்தலில் 2-வது இடத்தையும், வரவேற்பு அணிவகுப்பில் முதலிடத்தையும், கலைநிகழ்ச்சிகளில் முதலிடத்தையும், கூடாரப் பொருட்கள் செய்தலில் 2-வது இடத்தையும் பிடித்து வெற்றிக் கேடயத்தை வென்றனர்.

இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட இயக்க செயலாளர் எட்வர்ட் ஜான்பாலிடம், இயக்க மாநில தலைவரும், கல்வி அமைச்சருமான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். சான்றிதழ்களை மாநில செயலாளர் நரேஷ் வழங்கினார். இதைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பிரபாகுமார், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் சாரண, சாரணிய இயக்க மாவட்டத் தலைவர் ஏ.மங்கள்ராஜ், மாவட்டஆணையர் (சாரணர்) பி.சரவணன், மாவட்டஆணையர் (சாரணியர்) பி.ஜெயசுசிலா, மாவட்ட அமைப்பு ஆணையர் (சாரணர்) டி.அல்பர்ட் தினேஷ் சாமுவேல், மாவட்ட அமைப்பு ஆணையர் (சாரணியர்) என்.வள்ளியம்மாள், மாவட்டப் பயிற்சிஆணையர் (சாரணியர்) ஆ.ஜெயாசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்