அதிமுக பொதுக்குழுவில் அதிநவீன நுழைவாயில்...!
அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் அதிநவீன நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நாளை சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. கூட்ட அரங்கம், உணவு அருந்துவதற்கான பந்தல், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
அந்தவகையில், அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் 16 ஸ்கேனர்களுடன் கூடிய அதிநவீன நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 12 நுழைவு வாயில்களும், 250 செயற்குழு உறுப்பினர்களுக்கு 4 நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு ஆர்.எஃப்.ஐ.டி தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன அடையாள அட்டைகள் வழங்கப்படஉள்ளன. அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொதுக்குழுவில் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு நடைபெறும் இடம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுள்ளது.