விபத்தினால் கையை இழந்த பெண்ணுக்கு அதிநவீன செயற்கை கை பொருத்தம்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் விபத்தினால் கையை இழந்த பெண்ணுக்கு அதிநவீன செயற்கை கை பொருத்தப்பட்டது.

Update: 2023-08-24 14:48 GMT

திருவண்ணாமலை மேல்கச்சிராப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சர்மிளா (வயது 19). கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த விபத்தில் சர்மிளா தனது வலது கையை இழந்தார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மற்றும் புனர்வாழ்வு பிரிவு சார்பில் அவருக்கு அதிநவீன செயற்கை கை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் சர்மிளாவிற்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு முற்றிலும் இலவசமாக செயற்கை கை பொருத்தப்பட்டது.

அப்போது மருத்துவ கல்லூரி டீன் அரவிந்த், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் அரவிந்தன், உடலியல் மற்றும் புனர்வாழ்வு பிரிவு துறை டாக்டர்கள் சதீஷ், தங்கம் யுவராஜ் உள்பட மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்