மாநில அளவில் கயிறு இழுக்கும் போட்டி
சிவகாசி அருகே மாநில அளவில் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது.;
ஆலங்குளம்,
சிவகாசி அருகே உள்ள கல்லமநாயக்கர்பட்டி எஸ்.எம்.எஸ். கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான 22-வது கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. எஸ்.எம்.எஸ்.கல்லூரி தாளாளர் முத்துவாழி, கல்லூரி முதல்வர் பிரபுதாஸ் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் எதிர்கோட்டை ஜெயபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலம் முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மாநில செயலாளர் பிச்சையப்பன், எஸ்.எம்.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜநாயகம், கல்லூரி நிர்வாக அலுவலர் மாரிமுத்து, தி.மு.க. நிர்வாகிகள், விவேகானந்தன், பொன்னழகு, இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.