மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அரியலூர் கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளியில் இளையோருக்கான மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. போட்டிகள் 8, 10, 12 மற்றும் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளாக நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் சென்னை, கடலூர், சேலம், விழுப்புரம், திருச்சி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும், ரொக்க பணமும் வழங்கப்பட்டன. இதில் மருத்துவர் பிரவீன்குமார் மற்றும் ஆர்.டி.சி. குழுமம் ஜபருல்லா ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.