மாநில அளவிலான நீச்சல் போட்டியில் எஸ்.வி.ஆர். பள்ளி மாணவர் முதலிடம்
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் எஸ்.வி.ஆர். பள்ளி மாணவர் முதலிடம் பிடித்துள்ளது.
சமயபுரம் அருகே கூத்தூரில் மாநில அளவில் நீச்சல் போட்டி நடந்தது. போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அத்தாணி எஸ்.வி.ஆர். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 3-ம் வகுப்பு மாணவர் கிருத்திக் 25 மீட்டர் பிரீஸ்ட் ஸ்ட்ரோக் பார் பாய்ஸ் பிரிவில் ஆக்குவாஸ் பாஸ்ட் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார்.வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரன், முதல்வர் கீதா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.