மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கைப்பந்து போட்டி
கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கைப்பந்து போட்டியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், க.தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கே.டி.வெங்கிட்டி செட்டியார் மெமோரியல் கைப்பந்து கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கைப்பந்து போட்டி மின்னொளியில் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., தமிழ்நாடு போலீஸ், ஜி.எஸ்.டி., ஐ.சி.எப்., டிபி.ஜெ., இந்தியன் வங்கி அணிகளும், பெண்கள் பிரிவில் சென்னை சிவந்தி கிளப், எஸ்.ஆர்.எம்., ஐ.சி.எப்., தமிழ்நாடு போலீஸ், பி.கே.ஆர்., ஈரோடு ஜே.பி.டி. அணிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ., கந்திலி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.கே.டி.அசோக் குமார் கலந்து கொண்டு கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து பேசினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார், திருப்பத்தூர் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் டி.பிரபாகரன், ராஜா ராணி தாமோதரன், திருப்பத்தூர் கைப்பந்து கழக செயலாளர் அன்பரசு, ஒன்றிய துணைச் செயலாளர் பிரபு, பார்த்திபன், ஆர்.தசரதன், அவைத் தலைவர் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.