ராஜு குட்டி நினைவு ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அம்மன் 7-ஸ் கபாடி குழு சார்பில், ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சி மாநில விவசாய அணி துணைத்தலைவரும், குளூர் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான டி.தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில் ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். முடிவில் ஏ.எம்.கே.சி. கோபி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் ஆலத்தங்கரை அணி 2-ம் இடத்தையும், பி.மேட்டுப்பாளையம் அன்பு தம்பி அணி 3-ம் இடத்தையும், அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணி 4-ம் இடத்தையும் பிடித்தது.
அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இதில் தொழில் அதிபர் ராஜா என்கிற குணசேகரன், நட்ராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்தி, முருகேஷ், பிரசாந்த், சரவணன், சந்தோஷ், நவீன்குமார், அருள்சுதன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.