மாநில அளவிலான கால்பந்து போட்டி:திருச்சி மாவட்ட அணி தேர்வு

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் திருச்சி மாவட்ட அணி தேர்வு செய்யப்பட்டது.

Update: 2023-09-25 21:01 GMT

தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் அறிவுரையின்படி 20 வயதுக்கு உட்பட்ேடாருக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி தஞ்சையில் நடக்கிறது. இதில் திருச்சி மாவட்ட அணி சார்பில் கலந்து கொள்ளும் அணி வீரர்கள் தேர்வு கருமண்டபத்தில் உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் 2 நாட்கள் நடக்கிறது. 2005 முதல் 2007 வரையிலான ஆண்டுகளில் பிறந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த தேர்வு முகாமில் கலந்து கொண்டனர். தேர்வுக்கு வந்தவர்கள் அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இன்றும் (செவ்வாய்க்கிழமை) தேர்வு முகாம் நடக்கிறது. முகாமின் முடிவில் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி முகாம் நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி வரை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்