ராமநாதபுரத்தில், மாநில அளவிலான கால்பந்து போட்டி

ராமநாதபுரத்தில், மாநில அளவிலான கால்பந்து போட்டியை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-11 18:45 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் வடக்கு நகர் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான 2 நாள் கால்பந்து போட்டி ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கால்பந்து போட்டிகளை மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் அய்யனார், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாவட்ட கால்பந்தாட்ட கழக தலைவர் ராஜா நாகேந்திர சேதுபதி, மாநில ஆக்கி சங்க முன்னாள் தலைவர் செல்லத்துரை அப்துல்லா மற்றும் கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட மூலக்கொத்தளம் குடியிருப்பு ரேஷன்கடை, மாரியம்மன் கோவில்தெரு ரேஷன்கடை, கீரைக்காரத்தெரு ரேஷன்கடை, தர்ப்பசயனரோடு ரேஷன்கடை, கூரிசாத்த அய்யனார் கோவில் அருகே மதுரை ரோட்டில் பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். முன்னதாக ராமநாதபுரம் வந்த காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வுக்கு 21-வது வார்டு கவுன்சிலர் அய்யனார் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்