விழுப்புரத்தில்மாநில அளவிலான கால்பந்து போட்டி
விழுப்புரத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
விழுப்புரம் கால்பந்தாட்ட கழகங்கள் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி கடந்த 29, 30-ந் தேதி களில் விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனியில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 28 அணிகள் கலந்துகொண்டன. இதன் இறுதிப்போட்டியில் உளுந்தூர்பேட்டை அணி வெற்றி பெற்றது. 2, 3-ம் இடங்களை விழுப்புரம் அணிகளும், 4-ம் இடத்தை சென்னை அணியும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 4-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. இப்போட்டிகளை அன்பு, நத்தர்ஷா, சுந்தர், பத்மநாபன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.