மாநில அளவிலான சிலம்பம் போட்டி:தூத்துக்குடி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவிலான சிலம்பம் போட்டி மதுரை கூடல்நகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 6 பேர் தங்கப்பதக்கமும், 7 பேர் வெள்ளி பதக்கமும், 20 பேர் வெண்கலப்பதக்கமும் ஆக மொத்தம் 33 பேர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த சிலம்பம் ஆசான் தேசிய பயிற்சியாளர் ஆ.சுடலைமணி ஆகியோரை பெற்றோர், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.