மாநில அளவிலான சதுரங்க போட்டி

வேதாரண்யத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.;

Update:2023-03-07 00:15 IST

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் தனியார் பள்ளியில் நாகை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. சதுரங்க போட்டியை வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.இந்த போட்டியில் 510 பேர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், உதயம் முருகையன், வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, வக்கீல் அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்