மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்து வருகிறது.
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று கரூர் டெக்ஸ்சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 7-ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. இப்போட்டியை கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் கரூர், மதுரை, திண்டுக்கல், சென்னை, திருச்சி, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், கும்பகோணம், திருசெங்கோடு உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொண்டன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடக்கிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கரூர் அணியும், நாமக்கல் அணியும் மோதின. இதில் கரூர் அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் கரூர் அணியும், கும்பகோணம் அணியும் மோதின. இதில் கும்பகோணம் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிகள் 23-ந்தேதி வரை நடக்கிறது.