மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை

நெல்லையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை மேற்கொண்டார்.

Update: 2023-10-06 20:51 GMT

தமிழகத்தில் மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணை மாதம் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை மேற்கொண்டார்.

இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 37 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிகபட்சமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த வழக்குகளை மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார். நேற்று காலையில் தொடங்கிய இந்த விசாரணை மாலை வரை நீடித்தது. தொடர்ந்து அடுத்த மாதமும் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்