ஓய்வுபெற்றோர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
ஓய்வுபெற்றோர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஓய்வுபெற்றோர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் ஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் கணேசன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் மண்டல தலைவர் மகாலிங்கம், இணை செயலாளர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஓய்வு பெற்றோர் சங்கத்திற்கு என இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் அலுவலகத்தில், அலுவலக அறை ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு பணிகளில் பணியாற்றிய ஓய்வு பெற்ற மூத்த நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.