பட்டின பிரவேச நிகழ்ச்சி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் வீதியுலா சென்றார்.

Update: 2023-06-10 18:45 GMT

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் வீதியுலா சென்றார்.

பட்டின பிரவேசம்

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், பல்லக்கில் வீதியுலா சென்றார்.

முன்னதாக தருமபுரம் ஆதீனம், திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மேள, தாள வாத்தியங்கள் முழங்க, ஆதீன தம்பிரான்கள் புடை சூழ பல்லக்கில் எழுந்தருளினார்.

பூரணகும்ப மரியாதை

தொடர்ந்து ஆதீன மடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புளியாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

ஆதீனங்கள்

இதில் சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சாமிகள், தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம், தருமையாதீன சிவாகம தேவார பாடசாலை செயலாளர் ஆடிட்டர் குரு.சம்பத்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்