வாரச்சந்தை தொடக்கம்

பெரணமல்லூர் பேரூராட்சியில் வாரச்சந்தை தொடங்கப்பட்டது.

Update: 2022-09-02 13:41 GMT

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியில் பாஞ்சாலி அம்மன் கோவில் எதிரில் பேரூராட்சி சார்பில் வாரச்சந்தை தொடக்க விழா நடந்தது.

அங்காளம்மன் கோவில் நிர்வாகி சேகர் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்துபூஜை செய்தார். பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை தலைமை தாங்கினார்.

பேரூராட்சி துணைத்தலைவவ் ஆண்டாள் அண்ணாதுரை, வார்டு கவுன்சிலர்கள் கவுதமுத்து ஜமுனா, சுமித்ரா, சிவராமன், சிவகாமி, மோனிஷா பூங்காவனம், பானு, லோகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், அ.தி.மு.க. நகர செயலாளர் மூர்த்தி, பெரணமல்லூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அனைவரும் காய்கறி வாங்கி சந்தையை தொடங்கி வைத்தனர்.

இங்கு 25-க்கும் மேன்பட்ட காய்கறி கடைகள் உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெறும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் தமிழரசி கூறினார். முடிவில் இளநிலை உதவியாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்