கால்வாய் பணிக்கான நில பத்திரப்பதிவு தொடக்கம்
ராமநதி, ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் பணிக்கான நில பத்திரப்பதிவு தொடங்கியது
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராம நதி - ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் பணிகள் நிலம் கையக படுத்துவதற்கான பணிகள் நடந்த முடிந்த நிலையில முதற்கட்டமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பத்திரப்பதிவு நேற்று தொடங்கியது.
இதில் தென்காசி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், கடையம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ராமநதி, ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டு குழு அமைப்பாளர் உதயசூரியன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷிலா பரமசிவன், கவுன்சிலர் சங்கர், ஆழ்வார்குறிச்சி கவுன்சிலர் சக்தி சுப்பிரமணியன், ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணியின் துணை தாசில்தார் அனிஸ்பாத்திமா, செயற்பொறியாளர் பழனிவேல், உதவி செயற் பொறியாளர் முத்துமாணிக்கம், உதவி பொறியாளர் தினேஷ், உதவியாளர் பவுன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இது குறித்து மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கூறுகையில், கடந்த ஆட்சியில் இந்த திட்டத்திற்கான முறையான அனுமதி பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதற்கான முன்னேற்பாடு பணிகள் வேகமான முறையில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் திட்ட பணிகள் தொடங்கப்படும். தற்போது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
தொடர்ந்து நிலம் கொடுத்தவர்களுக்கு அவர் சால்வை அணிவித்து பாராட்டினார்.