வேளாண்மை சார்ந்த சுயதொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகளுக்கு அரசு நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் வேளாண்மை சார்ந்த சுயதொழில் தொடங்க அரசு நிதி உதவி வழங்குகிறது. இந்த நிதியுதவி பெற வருகிற 30-ந் தேதிக்குள் திட்ட அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Update: 2022-09-06 15:35 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் வேளாண்மை சார்ந்த சுயதொழில் தொடங்க அரசு நிதி உதவி வழங்குகிறது. இந்த நிதியுதவி பெற வருகிற 30-ந் தேதிக்குள் திட்ட அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சுயதொழில்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டபடிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு வேளாண் பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 7 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதிஉதவி பின்னேற்பு முழுமானியமாக வழங்கப்படஉள்ளது.

பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் கடன் உதவி பெற்று சுயதொழில்கள் தொடங்கலாம். தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டும் 25 சதவீதம் மானியம், அதிகபட்ச நிதிஉதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமா கவழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம்.

தகுதிகள்

இந்த திட்டத்தில் பயன்பெற 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வேளாண்மை பட்டம் பெற்று இருக்க வேண்டும். கணிணித் திறன் பெற்றவராகவும், அரசுமற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்துக்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதியுடையவர் ஆவார். விருப்பம் உள்ளவர்கள் வேளாண்மை ப்ட்ட படிப்புக்கான சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்டஅறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணங்களுடன் வேளாண்மைத் துறை அக்ரிஸ் நெட் இணையதளத்தில் 30.9.2022-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் தங்களின் விரிவான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடம் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர், வட்டாரவேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்