தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தங்களை புதிய அரசாணைகளின்படி வெளியேற்றுவதற்கான பணிகளை அரசு செய்யாமல், இந்த புதிய அரசாணைகளை (அரசாணை (நி) எண்கள் 246,247,248) உடனடியாக திரும்ப பெறவும், தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை அரசாணை 56-ன்படி, பணிநிரந்தரம் செய்யவும் கோரியுள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தினர். இந்த கல்லூரியில் 40 பேர் பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.