படிக்கட்டுகள் அகற்றப்பட்டும் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாத நிலை

படிக்கட்டுகள் அகற்றப்பட்டும் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாத நிலை உள்ளது.

Update: 2023-04-18 20:25 GMT


விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் கடந்த மார்ச் மாதம் 15 மற்றும் 16-ந் தேதிகளில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்வதற்காக கடைகளுக்கான படிக்கட்டுகள் அகற்றப்பட்டன. ஆனால் படிக்கட்டுகள் அகற்றப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வில்லை. இதனால் சிறு மழை பெய்தாலும் கழிவுநீர் கால்வாய்களிலிருந்து கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களும் படிக்கட்டுகள் அகற்றப்பட்டதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் மேலும் தாமதிக்காமல் பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வாருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்