பள்ளிக்கு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்
பள்ளிக்கு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் குறித்து நடவடிக்ைக எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே பாரைப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள பள்ளிக்கு அருகில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. எனவே இந்த கழிவுநீர் தடையின்றி வெளியேறும் வகையில் வாருகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.