குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

Update: 2023-09-19 20:16 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அய்யம்பட்டி தெருவில் எண்ணற்ற குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடிநீர் தொட்டி அருகே கழிவுநீர் செல்கிறது. இந்த கழிவுநீர் செல்ல போதுமான வாருகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளது. குடிநீர் பிடிக்க வருபவர்களும் சிரமப்படுகின்றனர். ஆதலால் குடிநீர் தொட்டி அருகே தேங்கி கிடக்கும் கழிவுநீரை வெளியேற்றுவதுடன், கழிவுநீர் செல்ல முறையான வாருகால் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்