மேடை பாடகர் தூக்குப் போட்டு தற்கொலை
மேடை பாடகர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேல்பாடி அருகே உள்ள இடையகுப்பம் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாரூன் ராஜா (வயது 42). இவர் இசைக்குழு நடத்தி வந்துள்ளார். பாடகராகவும் இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பொன்னை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.