மேடை அமைப்பாளர் கார் மோதி பலி
ஆத்தூர் அருகே மேடை அமைப்பாளர் கார் மோதி பலியானார்.
ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே உள்ள அக்கி செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 48). இவர் நரசிங்கபுரத்தில் ஒளி-ஒலி அமைப்பு மற்றும் விழாக்களுக்கு ேமடை, பந்தல் போன்றவை அமைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு ஆத்தூர் அருகே கல்பகனூர் கிராமத்தில் கோவில் திருவிழாவிற்கு மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அலங்காரம் செய்யும் பணியையும் செய்தார். பின்னர் கொத்தம்பாடி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது பெங்களூருவில் இருந்து ஆத்தூர் அருகே சின்னபுனல்வாசல் கிராமத்திற்கு சென்ற கார் எதிர்பாராதவிதமாக ராஜா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆத்தூர் ரூரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சசிகுமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.