விற்பனைக்காக குவிந்த பலாப்பழங்கள்

விற்பனைக்காக குவிந்த பலாப்பழங்கள்

Update: 2023-05-20 18:45 GMT


தமிழகம் முழுவதும் தற்போது கோடைகால சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கோடைகால சீசன் தொடங்கி நடைபெற்று வருவது மட்டுமல்லாமல் தற்போது கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருகின்றது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலும் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகின்றது. குறிப்பாக காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கமானது மாலை 5 மணி வரையிலும் அதிகமாகவே இருந்து வருகின்றது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு அதிக வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகின்றது. அது போல் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் தர்பூசணி, இளநீர் மற்றும் பலவகையான பழங்களை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே ராமநாதபுரம் நகரில் கலெக்டர் அலுவலகம் அருகே, அரண்மனை சாலை உள்ளிட்ட நகரின் பல முக்கிய இடங்களிலும் விற்பனைக்காக ஏராளமான பலாப்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த பலாப்பழங்கள் தற்போது ஒரு கிலோ 30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு மாத சீசன் உள்ளதால் தற்போது இருக்கும் விலையை விட பலாப்பழத்தின் விலை இன்னும் குறைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அது போல் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த பலாப்பழங்களை பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்