தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது

பாளையங்கோட்டையில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-04-27 18:45 GMT

பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், உறவினரான சுரேந்திரன் (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சதீஷ் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சுரேந்திரன் வாக்குவாதம் செய்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேந்திரனை நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்