டிரைவர்களுக்கு கத்தி குத்து; தொழிலாளி கைது

கோத்தகிரி அருகே முன்விரோதம் காரணமாக 2 டிரைவர்களை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-17 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே முன்விரோதம் காரணமாக 2 டிரைவர்களை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

முன்விரோதத்தால் வாக்குவாதம்

கோத்தகிரி சோலூர்மட்டம் அருகே கடசோலை தென்றல் நகரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 35). ஜீப் டிரைவர். இவருக்கும், கடசோலை ஆடுமந்து பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் தொழிலாளியான சிவபெருமாள் (42) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அலெக்சாண்டர் பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது இரவு 10 மணியளவில் தென்றல் நகர் பிரிவில் சாலையோரத்தில் தனது காரை நிறுத்தி, சக டிரைவர்களான முரளி, பால் மணியுடன் பேசி கொண்டிருந்தாா். அந்த வழியாக வந்த சிவபெருமாள், காரை எடுக்குமாறு கூறியுள்ளார். காரை ஓரமாக தான் நிறுத்தி உள்ளோம் என அவர்கள் கூறினர். இதனால் அலெக்சாண்டர் தரப்புக்கும், சிவபெருமாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கொலை மிரட்டல்

இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமாள் கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி தனது தந்தையிடம் நீ தானே தகராறு செய்தாய், உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் அலெக்சாண்டரின் கையில் குத்தினார். இதை தடுக்க வந்த முரளி கையிலும் கத்தி குத்து விழுந்தது. இதனால் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து அலெக்சாண்டர் சோலூர்மட்டம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளிகளை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த சிவபெருமாளை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்