காய்கறி வியாபாரி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து
தேன்கனிக்கோட்டையில் மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் காய்கறி வியாபாரி உள்பட 2 பேரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை கீழ்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மகபூப்பாஷா. இவருடைய மகன் அப்சல்பாஷா (வயது 22). அப்பகுதியில் எல்லப்பா என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது கடைக்கு அப்சல்பாஷா சென்று மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்சல்பாஷா தன்னிடம் இருந்த கத்தியால் எல்லப்பாவை குத்தினார். இதை தடுக்க முயன்ற எல்லப்பாவின் நண்பர் நந்தகுமாரையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்சல்பாஷாவை கைது செய்தனர்.