புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா

வால்பாறை அருகே புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா நடந்தது.

Update: 2023-05-02 18:45 GMT

வால்பாறை, 

வால்பாறை அருகே சோலையாறு அணை நகர் பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஜெப வழிபாடு, நவநாள் பக்தி முயற்சிகள், திருப்பலி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மே தினத்தை முன்னிட்டு காலை 11.30 மணிக்கு கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. கோவை வட்டார முதன்மை குரு ஜார்ஜ் தனசேகர், பொள்ளாச்சி வட்டார முதன்மை குரு ஜேக்கப் ஆகியோர் தலைமையில், பங்கு குரு ஜார்ஜ் சகாயராஜ் முன்னிலையில், பங்கு குருக்கள் ஜெகன் ஆண்டனி, மரிய அந்தோணிசாமி உள்ளிட்டோர் இணைந்து கூட்டு பாடல் திருப்பலியை நிறைவேற்றினார்கள்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு புனித சூசையப்பர் சொரூபத்துடன் தேர்பவனி நடைபெற்றது. சோலையாறு நகர் பஜார் பகுதியில் இருந்து தமிழக-கேரள எல்லையில் உள்ள மளுக்கப்பாறை பகுதி வரை தேர்பவனி நடந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் புனித சூசையப்பர் சொரூபத்தை வழிபட்டு சென்றார்கள். இதில் வடமாநில தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்