புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் சார்பில் புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
தென்திருப்பேரை:
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் சார்பில் பேய்க்குளம் புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனை தொழுநோயாளிகளுடன் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. தொழுநோயாளிகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் மற்றும் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினர். சாம்ஜெபராஜ் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் சமூகநல ஊழியர் ஹெய்ன்ஸ், பிசியோதெரபி பாக்கியராஜ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.