புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
சேதுக்குவாய்த்தான் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தானில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை புனித மிக்கேல் அதிதூதர் திருவுருவ பவனியுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள் சவரிநாதன், ராயப்பன், சகாயம், மரிய அரசு, ஆரோக்கியதாஸ் மற்றும் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 9 நாட்கள் தினமும் சிறப்பு திருப்பலியும், வருகிற 28-ந்தேதி மாலை 6.30 மணியளவில் திருவிழா மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் புனிதரின் தேர்பவனியும் நடைபெறுகிறது. 29-ந்தேதி 10-ம் திருவிழா அன்று காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும், இரவு 7 மணிக்கு நற்கருணை பவனியும் நடைபெறுகிறது. 30-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு பொது அசன விருந்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாமஸ் அடிகளார், ஊர் நலக்கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.